தலைமை ஆசிரியர்கள் 716 பேருக்கு இடமாறுதல்
சென்னை: அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியிட மாறுதலுக்கான கவுன்சலிங், நேற்று நடந்தது. இதில், 716 பேருக்கு, பணியிட மாறுதலுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. காலை, மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெறுபவர்களுக்கும், பிற்பகலில், மாவட்டம் விட்டு, மாவட்டம் மாறுதல் பெறுபவர்களுக்கும், கவுன்சலிங் நடந்தது. இரு வேளைகளிலும் சேர்த்து, 1,285 பேர், அழைக்கப்பட்டனர். இவர்களில், 412 பேர், மாவட்டத்துக்கு உள்ளேயும், 304 பேர், மாவட்டம் விட்டு, மாவட்டங்களுக்கும், பணியிட மாறுதல் பெற்றனர். புதிய பணியிடத்தை தேர்வு செய்த தலைமை ஆசிரியர்கள், உடனடியாக பணியில் சேர வேண்டும் என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment