Sunday, 30 June 2013

59 ஆண்டுகளுக்கு பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் தமிழர் நீதியரசர் சதாசிவம்!

59 ஆண்டுகளுக்கு பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் தமிழர் நீதியரசர் சதாசிவம்!

உச்ச நீதிமன்றத்தின் 40வது தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது அல்டமாஸ் கபீர் இருந்து வருகிறார். இவரது பதவி காலம் ஜூலை 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா, கடப்பனல்லூர் கிராமத்தில் விவசாயக்குடும்பத்தில் 1949 ஏப்ரல் 27ல் பிறந்தவர் சதாசிவம். 1973ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார்.

1996ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். 2007ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற உள்ளார்.

59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார். நீதிபதி சதாசிவத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜூலை 19ஆம் தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இவர் 27.04.2014 வரை இந்தப் பதவியில் இருப்பார்.

No comments:

Post a Comment