Saturday, 15 June 2013

ஒருமுறை கூட பாசத்துடன் அணைத்ததில்லை!

இசையால் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரித்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது தாயை ஒருமுறை கூட பாசத்துடன் அணைத்ததில்லையாம்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தனது தாயார் தான், தனது இசையறிவை கண்டுபிடித்து தன்னை ஊக்குவித்தவர் என்று கூறியுள்ளர்.

மேலும் தந்தை இறந்த பின்பு வீட்டில் இருந்த இசைக்கருவிகளை விற்கலாம் என பலரும் கூறினார்கள்.

ஆனால் எனது தாயார் மறுத்து விட்டார்கள். எனது மகன் இருக்கிறான். அவன் இசையமைப்பாளராக வருவான்.

அவன் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கையுடன் கூறி என்னை ஊக்குவித்ததே தான் இசையமைப்பாளராக மாற காரணம் என்கிறார்.

ஆனால் சினிமாவில் வருவது போல அம்மா, மகனே என்று கட்டிக் கொள்ளும் அம்மா, மகனாக நாங்கள் இல்லை. ஏன், நான் ஒருமுறை கூட எனது தாயாரை கட்டிக் கொண்டதே இல்லை.

நான் ஒரு முழுமையான ரஜினி ரசிகன். எனவே அவரைப் போலவே எதிலும் நேர்மறையான சிந்தனையுடன் இருப்பவன் என்றும் வாழ்க்கையிலிருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment