Sunday, 11 August 2013

கடவுளும் நானும் ஒன்றுதான்......

கடவுளும் நானும்
ஒன்றுதான்.......
கடவுள் வாயை மூடி பிச்சை கேட்கிறான்
காணிக்கை என்பதன் மூலம் .
நான் வாயை திறந்து பிச்சை எடுக்கிறேன்
பசிக்குது என்று ........
சாப்பிடாத கடவுளுக்கு எல்லாம் தருகிறார்கள்
சாப்பிட முடிந்த எனக்கு எதுவும் தர மறுக்கிறார்கள்............
ஆடை அணிய மறுக்கம் கடவுளுக்கு
பட்டு ஆடை...
ஆடை அணியும் எனக்கு
சாக்குதான் ஆடை.........
கடவுள் சிலை நனையகுடது என்பதற்காக
கோவில் வீடு,,,,,,,,,,,,
நான் நனைந்து கொண்டே இருக்க
குப்பை தொட்டிதான் என் வீடு.........
கடவுள் சிலைக்கு பால் பழம் உணவு ஆடை
இது அனைத்தும் கொடுத்தும்
அவன் பதில் ஊமைதான்....
இதில் ஏதாவது ஒன்று கொடுத்தால் போதும்
எனக்கு நீங்கள் தான் கடவுள்.....
நீங்கள் கடவுளை தேடுபவர்கள்
ஆனால் நான் தினம் தோறும் பார்கிறேன்..
என் கடவுள் நீங்கள் தான் ..............!!!!!!!!!!

-Kali Muthu

Visit our Page -► தமிழால் இணைவோம்


No comments:

Post a Comment