Saturday, 22 February 2014

கணக்குப்புதிர்


கணக்குப்புதிர்
ஓர் ஏரியில் நிறைய பூக்கள் பூத்திருந்தன! அந்த வழியாக பறவைகள் பறந்து வந்தன! நீண்ட தூரம் பறந்து வந்ததால் சற்று இளைப்பாறலாம் என்று எண்ணி ஒவ்வொரு பூவின் மீதும் ஒரு பறவை அமர்ந்தது! ஒரு பறவைக்கு மட்டும் இடமில்லை! அடடா ஒரு பறவைக்கு மட்டும் இடமில்லையே! சரி ஒரு பூவுக்கு இரண்டு பறவைகளாக அமர்ந்து கொள்வோம் என்று முடிவெடுத்து அப்படியே அமர்ந்து கொண்டன! அடடா என்ன ஆச்சரியம்!! இப்போது ஒரு பூ மீதமிருந்தது!!! அப்படியானால் எத்தனை பூக்கள்? எத்தனை பறவைகள்?

No comments:

Post a Comment