Saturday, 4 November 2023

ஜப்பான் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்!

Vஜப்பான் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்!

சமீபத்தில் #அரசுப்பள்ளி மாணவர்களில் 25 பேர் ஜப்பான் நாட்டுyvgக்கு சுற்றுலா அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எடுத்த குறும்படங்களுக்குக் கிடைத்த பரிசுதான் இந்த ஜப்பான் சுற்றுலா. என்ன குறும்படம்?  

கடந்த ஓராண்டாக மாணவர்களின் கலை ரசனையையும் நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்தவும் ‘உலக சினிமா திரையிடல்’ நம்முடைய அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இத்திரையிடலில் உலகெங்கும் வெளியான பிரபலமான #சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, அது குறித்து சினிமா ஆர்வலர்கள் உரைகளும் நிகழ்த்துகின்றனர். திரைப்படம் குறித்து மாணவர்களிடையே விவாதமும் நடத்தப்படுகிறது.

இந்தத் திரைப்படங்களை #மாணவர்கள் பார்ப்பதோடு, அது குறித்த விமர்சனங்களை  கட்டுரையாகவும், பேச்சாகவும், ஓவியமாகவும், சுவரொட்டியாகவும் இன்னும் பல்வேறு கலை வடிவங்களில் வெளிப்படுத்தலாம். இதில் சிறந்த விமர்சனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்படுகின்றன. இப்படி பரிசு பெற்ற மாணவர்கள் இடையே வட்டார அளவிலும் மாநில அளவிலும்  திரையிடல் சார்ந்த #போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வென்ற மாணவர்களுக்குக் குறும்படங்கள் எடுப்பது குறித்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் பயின்ற மாணவர்கள் #குறும்படங்கள் எடுத்தனர். அந்தக் குறும்படங்களில் சிறந்த படங்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டதோடு, அந்த படங்களில் பங்களிப்பு செய்த 25 மாணவர்கள்தான் தற்போது ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 
ஆறு நாட்கள் #ஜப்பானில் தங்கி அங்குள்ள முக்கியமான சுற்றுலா தளங்களை இந்த மாணவர்கள் பார்வையிடவுள்ளனர். 
 ‘’கல்வி என்பது வெறும் பாடப் புத்தக்கங்களுக்குள் முடங்கிவிடக்கூடாது என முதலமைச்சர் அவர்கள் எப்போதும் குறிப்பிடுவார். அவருடைய சொல்லுக்கு இணங்க, நம்முடைய பள்ளிக் கல்வித் துறை கலை மற்றும் பண்பாட்டு வெளியில் திறனுடன் விளங்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை வெளிநாடுகளுக்கு தொடர்ந்து அனுப்பி வைத்துவருகிறோம். அதில் ஒரு பகுதியாக இந்த மாணவர்கள் ஜப்பானுக்கு செல்கிறார்கள். அடுத்து ஒரு மாணவர் படை #தென்கொரியாவுக்குச் செல்லவுள்ளது’’ என்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
ஏற்கனவே #கலைத்திருவிழா போட்டிகளிலும் சிறார் இலக்கிய மன்றப் போட்டிகளிலும் வென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. 
ஜப்பான் செல்லும் மாணவர்களோடு ஆறு ஆசிரியர்களும், இரண்டு கல்வித் துறை அலுவலர்களும் உடன் சென்றிருக்கின்றனர். 

#TNGovtSchools | #School | #Students | #Education | #Teachers | #GovtSchools | #கல்விச்சுற்றுலா | #educationtour | #சிறார்திரைப்படம் | #TNSED | #TNEducation | #TNDIPR | #Arasupalli | #japan | #பள்ளிக்கல்வித்துறை 

Anbil Mahesh Poyyamozhi

No comments:

Post a Comment