Sunday, 3 December 2023

Oprn Source Foundation, Chennai- கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான லூனா கேம்ப் 2023 போட்டியில் வெற்றி பெற்ற ஆனையூர் அரசு உயரிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் ராம்பிரசாத் க்கு இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் வாழ்த்து.

Oprn Source Foundation, Chennai- கோவையில் நடைபெற்ற  மாநில அளவிலான லூனா கேம்ப் 2023 போட்டியில் வெற்றி பெற்ற ஆனையூர் அரசு உயரிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் ராம்பிரசாத் க்கு  இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் வாழ்த்து.

Oprn Source Foundation, Chrnnai- மாநில அளவிலான லூனா கேம்ப் 2023 போட்டி தமிழகத்தில் பயிலும் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான போட்டியினை அறிவித்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். மூன்று கட்டங்களாகத் தேர்வு நடைபெற்றது. எழுத்துத் தேர்வு ,செயல்திட்டம் தயாரித்த்ல் மற்றும் செயல்திட்டத்தினை விளக்குதல் . இம்மூன்று கட்டத்தேவிலும்  36 பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். இவர்களுக்கான பாராட்டு விழா 2.12.2023 கோவை எஸ்.என்.அகாடெமியில் நடைபெற்றது.
இதில்  விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஜேசிஸ் மெட்ரிக் பள்ளி, சிவகாசி,  சின்மய வித்யாலயா மெட்ரிக் பள்ளி, வடமலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி , ராவ் பக்தூர் ஏ கே.டி.ஆர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகள் சிறந்த படைப்பிற்கான  பரிசைப் பெற்றனர். மாநில அளவில் வெறறி பெற்ற
ஆனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி,  நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, 
 பி.ஏ.சி.ஆர், அம்மனியம்மாள்  பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் இவ்விழாவில் கலந்து கொண்டன்ர்.
 இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன், இவ்விழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுடன் க்லந்துரையாடினார். பின்பு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழும்,பரிசாக மாணவர்களே உருவாக்கிய தொலைநோக்கியும் வழங்கிச் சிறப்பித்தார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேசன் நிறுவனத்தின் கிருத்திகா, பரத் பாலாஜி மற்றும் குழு உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment