10-ஆம் வகுப்பு (SSLC), 11-ஆம் வகுப்பு (+1) மற்றும்12-ஆம் வகுப்பு (+2) பொதுத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத இப்போது விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பிக்க கடைசிநாள் : 26 டிசம்பர் (26-12-2024)
யாரெல்லாம் இந்த 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும்?
வீட்டிலிருந்தே படித்து 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வாளர்கள் (Private Candidates) விண்ணப்பிக்கலாம். எந்த வயதினரும் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 14 1/2 (பதினாளரை) வயது இருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்வு எழுதி சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அந்த குறிப்பிட்ட பாடங்களில் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற இப்போது விண்ணப்பிக்கலாம்.
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
9-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற / பெறாத மாணவர்கள் மற்றும் 9-ஆம் வகுப்பில் படிப்பை பாதியில் விட்டவர்கள்.
10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 11-ஆம் வகுப்பு (+1) தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
11-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12-ஆம் வகுப்பு (+2) தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது ?
தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்விற்க்கு விண்ணப்பிக்க சேவை மையங்களை (Service Centers) ஏற்படுத்தியுள்ளது. அங்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சேவை மையங்களின் முகவரி கீழ்காணும் லின்கில் உள்ளது.
https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1733309369.pdf
தேர்வு கட்டணம்:
10-ஆம் வகுப்பு - ரூ.125 + Late fee ரூ.500
11-ஆம், 12-ஆம் வகுப்பு - ரூ.255 + Late fee ரூ.1000
விண்ணப்பித்த பிறகு ஒப்புகை சீட்டை வைத்து அறிவியல் பாடத்தின் செய்முறை தேர்விற்க்கு (Science practical exam) மாவட்ட கல்வி அலுவலகத்திற்க்கு சென்று தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர் ஆன்லைனில் தேர்விற்க்கான அனுமதிசீட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
10, +1, +2 தேர்விற்க்கான கால அட்டவணை (Exam Time table) கீழ்காணும் லின்கில் உள்ளது.
https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1729853324.pdf
கூடுதல் விபரங்கள் தமிழக அரசின் கீழ்காணும் அறிவிப்புகளில் தமிழில் உள்ளது, படித்து அறிந்து கொள்ளவும்.
https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1734690779.pdf

No comments:
Post a Comment