Thursday, 26 December 2024

இனி நம் விடுப்பு என்பது களஞ்சியம் கையிலே உள்ளது!

 இனி நம் விடுப்பு என்பது களஞ்சியம் கையிலே உள்ளது! 




நம்

கைபேசியில் 

மின் சேமிப்பு தீர்ந்து போய் இருக்கலாம் 

காசு தீர்ந்து போய் இருக்கலாம் 

டேட்டா தீர்ந்து போய் இருக்கலாம் 

இணைய வசதி இல்லாமல் 

சுற்றிக்கொண்டே இருக்கலாம் 


EMIS போல

நாம்  பதிவு செய்தும் 

சர்வரில் பதிவாகாமல் ஏமாற்றம் செய்யலாம்...


நாம் பதிவு செய்ததை அலுவலகத்தில் பார்க்காது இருக்கலாம்...


இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் 

நாம் களஞ்சியம் செயலியில் தான் நமது விடுப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு 

வரமா சாபமா என்று தெரியவில்லை. 


விடுப்பிற்காக அதிகாரிகளை பாடிய நாம் 

இனிமேல் 

களஞ்சியத்திடம் பாட வேண்டிய நிலை வரலாம். 


முதன் முதலாக இத்திட்டம் 

வருவதால் 

இதை கற்றுக் கொள்வதற்கு 

சில நாட்கள்/மாதங்கள் 

ஆகலாம். 

சோதனைக் கூட எலிகளாக 

இந்த பரிசோதனை நிகழ்வில் 

நாமும் பங்கேற்கிறோம் என்ற பெருமையுடன் 

கடந்து செல்வோம்.


தொழில்நுட்பங்கள் 

ஊழியர்களை 

கண்காணிக்கும் 

காலத்தில் 

அடுத்தடுத்து 

என்னென்ன வரப் போகிறதோ?

என்ற ஐயங்கள் அனைவருக்கும் இருந்தாலும் 

இதுவும் கடந்து போகும் ..


களஞ்சியத்தில் பதிவு செய்த பின்பும் காகிதத்தில் எழுதிக் கொடுக்க வேண்டுமா என்ற விவரத்தையும் கல்வித்துறை அறிவிக்க வேண்டும். 


பல நேரங்களில் 

பதிவேடுகளை பராமரிப்பதில் நமது பாடுகள் பெரும்பாடுகளாக உள்ளது.


சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுப்பாரா? 

என்ற ஒரு சொல்லாடல் உண்டு. 


களஞ்சியம் வாய்ப்பு வழங்கியுள்ளது. 


அதற்கு ஏற்ப்பளிப்போர் 

வாய்ப்பளிப்பாரா? 

என்ற எதிர்பார்ப்பு இருக்கும். 


சவாலே சமாளி! 


--புலம்பும் ஆசிரியர்களில் ஒருவர்😆😂🤣

No comments:

Post a Comment