அரசுப் பணியில் நியமனம் செய்யப்படும் தனியர் ஒருவரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மை தன்மையை அறிவது அவர் பணிபுரியும் துறை சார்ந்த துறைத் தலைவர்/ ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரின் கடமையும், பொறுப்பாகும். உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கு, தனியர் கட்டணம் செலுத்தி பெறும் நடைமுறை சரியானது அல்ல என்பதை குறிப்பிட்டு , தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை சான்று வேண்டி துறைத்தலைவர்/ஊதியம் பெற்று அலுவலர் மூலம் விண்ணப்பம் வரப்பெற்றால் எவ்வித கட்டணமும் இன்றி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை மனுக்கள் சமர்ப்பித்திருந்தேன். தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் படித்து பட்டம் பெற்ற அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு எவ்வித கட்டணமின்றி உண்மை தன்மை சான்று (சார்ந்த துறை தலைவர்களிடருந்து கோரிக்கை வரும் பட்சத்தில் கட்டணம் இன்றி) வழங்க வேண்டும் என்று அரசால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் எவ்வித கட்டணமும் இன்றி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்மை தன்மை சான்று ,துறைத் தலைவர்கள் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்

No comments:
Post a Comment