Friday, 21 August 2015

சிலிர்க்க வைக்கும் செயலிகள் : கூகிளின் புதிய தளம்


பதிவு செய்த நாள்: சனி, ஆகஸ்ட் 15, 2015 08:13 AM IST
main-image

ஒரு காலத்தில் எப்படி கணினிகளுக்கு சாப்ட்வேர் என்று சொல்லப்படும், மென்பொருட்கள் உயிரூட்டியதோ, அதேபோல் இன்று ஸ்மார்ட் போன்களில் எண்ணற்ற பல சிறப்பான வசதிகளை பெற அனுதினமும் ஒரு செயலி அறிமுகமாகி ஸ்மார்ட் போன் மற்றும் செயலிகளின் சந்தைகளின் கவனத்தை ஈர்த்து விடுகிறது.

அந்த வரிசையில் தற்போது, கூகிள் நிறுவனம் ஆண்டுராய்டு எக்ஸ்பெரிமென்ட் (Android Experiment) என்னும் புதிய இணையதளத்தை ஸ்மார்ட் போன் மற்றும் செயலி பிரியர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

இந்த தளம் முழுவதும், நாம் இதுவரை பார்த்திராத, பயன்படுத்தினால் புதுவித அனுபவத்தை ஏற்படுத்தக் கூடிய செயலிகள் வரிசைக்கட்டி நிற்க்கின்றன. குறிப்பிடும் படியாக ஐஒஐஒ (IOIO) என்ற செயலி உங்கள் படத்தை கண்கவரும் விதத்தில் பென்சில் டிராயிங் போல மாற்றுகிறது. இதில் என்ன விசேஷம், இது போல நிறைய செயலிகள் ஏற்கனவே சந்தையில் இருக்கிறது என்று நினைகிறீர்கள் தானே ?

இந்த காணொளி பாருங்கள் புரியும் : https://www.youtube.com/watch?v=6ilgOs5dOpA&feature=youtu.be

அதே போல மற்றொரு செயலியான இங்க் ஸ்பேஸ் (ink space) 3 டி வடிவ படங்களை எளிதாக வரைய துணை புரிகிறது.

இந்த தளத்தில் உள்ள செயலிகளை பயன்படுத்துவது மட்டுமில்லாமல், இந்த செயலிகளை மேம்படுத்த நீங்களும் எதாவது உதவிகள் செய்யலாம். இந்த செயலிகளின் மூல குறியீடுகள் (Source Code) இந்த தளத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன.

தளம் செல்ல : https://www.androidexperiments.com/

No comments:

Post a Comment