Friday, 21 August 2015

ஆண்ட்ராய்டு 6.0 - பதிப்பில் உள்ள 5 புதிய வசதிகள்


பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 19, 2015 08:02 AM IST
main-image

click to print
ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் இயங்குதளமான ஆண்ட்ராய்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது புதிய பதிப்பின் பெயரை வெளியிட்டது. அதனை தொடர்ந்து விரைவில் வெளிவரவிருக்கும் புதிய ஆண்ட்ராய்டு 6.0 -வில் உள்ள சில சிறப்பான வசதிகளை பற்றி செய்தி வெளியாகியுள்ளது.

ஆப் பெர்மிஷன்

பொதுவாக ஒரு செயலியை (ஆப்) இன்ஸ்டால் செய்யும் போது, அந்த செயலி உங்கள் போனில் உள்ள எதை எதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கேட்கும், இதில் குறிப்பாக நம்முடைய காண்டாக்ட் லிஸ்ட், ஆடியோ, வீடியோ போன்றவை அதில் இடம்பெற்றிருக்கும். தற்போது வெளிவரவிருக்கும் இந்த புதிய பதிப்பில், பெர்மிஷன்களை மாற்றி அமைத்துக் கொள்ளமுடியும். இந்த வசதி முந்தைய பதிப்புகளில் இல்லை.

மெமரி ட்ராக்கர்

உங்கள் ஸ்மார்ட் போனில் பதியப்பட்டிருக்கும் செயலியில் எந்த செயலி அதிகளவு மெமரியை எடுத்துக்கொள்கிறது என்பதை அறிய இந்த மெமரி ட்ராக்கர் உங்களுக்கு உதவும். இதன் மூலம் தேவையில்லாமல் அதிக மெமரியை எடுத்துக்கொள்ளும் செயலியை இனங்கண்டு அகற்றிவிடமுடியும்.

பிங்கர் பிரிண்ட் ஆக்செஸ் (கை ரேகை)

உங்கள் போனை மற்றவர் பயன்படுத்துவதில் இருந்து பாதுகாக்க பிங்கர் பிரிண்ட் ஆக்செஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும்.

ஆட்டோ பேக்அப்

உங்கள் போனில் உள்ள தகவல் அழிந்தாலும், பேக்அப் மூலம் தகவல்களை எடுத்துக்கொள்ள ஏதுவாக, உங்கள் போனில் உள்ள தகவல்கள் யாவும் கூகிள் டிரைவ் மூலம் பேக்அப் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது.

பவர் சேவிங்

முந்தைய பதிப்புகளை விட இந்த பதிப்பில், பேட்டரியின் திறனை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்க் கொள்ளப்பட்டு வருகின்றன. அதிக நேரம் போன் பயன்பாட்டில் இல்லாமல் போனால், தற்காலிகமாக சில செயலிகளின் செயல்பாடுகளை நிறுத்துவது போன்ற சில சேமிப்பு நடைமுறைகள் இந்த பதிப்பில் வெளிவர உள்ளன.

No comments:

Post a Comment